கால்பந்து

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் + "||" + 7th Indian Super League (ISL) Football Series

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர்

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர்
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. வெற்றிக்கான கோலை ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் ஸ்டெய்மேன் 20-வது நிமிடத்தில் அடித்தார். 10-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் சென்னை-ஒடிசா (மாலை 5 மணி), ஜாம்ஷெட்பூர்-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஐ.எஸ்.எல். கால்பந்தில் கடந்த 29-ந் தேதி நடந்த மோகன் பகான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் ரபெல் கிரிவெல்லாரோ இடது கணுக்காலில் காயம் அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் அவரது காயத்தின் தன்மையை ஆய்வு செய்த அணியின் டாக்டர்கள் குணமடைய குறைந்தபட்சம் 2 மாதம் பிடிக்கும் என்று தெரிவித்ததை அடுத்து அவர் இந்த போட்டி தொடரில் இருந்து நேற்று விலகினார்.பிரேசிலை சேர்ந்த 31 வயது நடுகள வீரரான கிரிவெல்லாரோவின் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.