கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’ + "||" + Chennaiyin FC vs SC East Bengal: 10-Men SCEB Hold Chennai to 0-0 Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்கால் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பெங்கால் அணி வீரர் அஜய் சேத்ரி ‘பவுல்’ செய்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் பெங்கால் அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. 

ஆனாலும் அந்த அணியின் கோல் கீப்பர் தேவ்ஜித் முஜூம்தர் திறம்பட செயல்பட்டு சென்னை அணியின் கோல் முயற்சிகளை முறியடித்தார். சென்னை தரப்பில் 6 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன.
2. ஐதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தது
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3. ஜூன் 02: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
4. ஜூன் 01: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5. நாளை முதல் முழு ஊரடங்கு: சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன் வாங்க குவிந்த மக்கள்
நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளநிலையில், சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.