கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Kerala - Jamshedpur match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது. கேரள அணிக்கு கிடைத்த அருமையான கோல் வாய்ப்பில் பந்து கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் வெளியேறியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 6-வது ‘டிரா’வாகும். 3 வெற்றியும், 5 தோல்வியும் கண்டுள்ளன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.