கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Bangalore-Hyderabad draw

ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் பெங்களூரு-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’-வில் முடிந்தது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி 9-வது நிமிடத்திலும், லியோன் அகுஸ்டின் 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த சீசனில் சுனில் சேத்ரி அடித்த 5-வது கோல் இதுவாகும். 2 கோல்கள் முன்னிலை பெற்றதால் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் அரிடேன் சந்தனா 86-வது நிமிடத்திலும், பிரான் சன்டஜா 90-வது நிமிடத்திலும் அதிரடியாக பதில் கோல் திருப்பி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தொடரில் அரிடேன் சந்தனா அடித்த 7-வது கோல் இதுவாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் சந்திக்கின்றன.