கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Goa-East Bengal draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் ‘டிரா’ முடிந்தது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணி சார்பில் இகோர் அன்குலா 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி தரப்பில் கேப்டன் டேனியல் பாக்ஸ் 65-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன. 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 30 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா கண்டால் தொடர்ச்சியாக அதிக ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை படைக்கும். அந்த அணி தனது கடைசி 12 ஆட்டங்களில் (9 வெற்றி, 3 டிரா) தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.