ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது


கவுகாத்தி வீரர் பிரவுன்
x
கவுகாத்தி வீரர் பிரவுன்
தினத்தந்தி 30 Jan 2021 9:07 PM GMT (Updated: 30 Jan 2021 9:07 PM GMT)

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

கவுகாத்தி அணியில் டேஷோர்ன் பிரவுன் 6-வது மற்றும் 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மும்பை சிட்டி தரப்பில் 85-வது நிமிடத்தில் ஆடம் லே பான்ட்ரோ கோல் திருப்பினார். கடந்த 12 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத மும்பை சிட்டி இந்த ஆட்டத்திலும் டிராவோ அல்லது வெற்றியோ கண்டிருந்தால் ஐ.எஸ்.எல். வரலாற்றில் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்திருக்கும். மயிரிழையில் அச்சாதனை நழுவிப் போனது.

மும்பை சிட்டி அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5-வது வெற்றியை ருசித்த கவுகாத்தி அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஐதராபாத் எப்.சி.(மாலை 5 மணி), ஏ.டி.கே. மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி)அணிகள் மோதுகின்றன.

Next Story