கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி தோல்வி + "||" + ISL Football: Chennai team loses

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 77-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. -ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்திடம் மீண்டும் வீழ்ந்தது. ஐதராபாத் அணி தரப்பில் பிரான் சன்டஜா 28-வது நிமிடத்திலும், ஜோயல் சியானிஸ் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 15-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி 5-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.

இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்து 8-வது வெற்றியை ருசித்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா-ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திக்கின்றன.