7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 79-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. ஒடிசா சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும். ஜாம்ஷெட்பூர் அணி தரப்பில் முகமது முபாஷிர் 41-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.