கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி + "||" + ISL Football: Bangalore team wins 4th

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 4-வது வெற்றி பெற்றது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்தது. பெங்களூரு அணியில் கிளைட்டன் சில்வா 12-வது நிமிடத்தில் இடது காலால் உதைத்து முதல் கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மாற்று ஆட்டக்காரர் பராக் ஸ்ரீவாஸ் இலக்கை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பி, ஈஸ்ட் பெங்கால் அணியின் கோல் கீப்பர் தேப்ஜித் மஜூம்தார் காலின் பின்பகுதியில் உரசியபடி கோல் வளையத்துக்குள் புகுந்து சுயகோலானது.15-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு எப்.சி. பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் சந்திக்கின்றன.