கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Chennai-Bangalore match 'draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’-வில் முடிந்தது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

16-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 6-வது இடத்திலும், சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்திலும் உள்ளன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.