ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி 9-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி 9-வது வெற்றி
x
தினத்தந்தி 6 Feb 2021 10:40 PM GMT (Updated: 6 Feb 2021 10:40 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 9-வது வெற்றியை பெற்றது.

கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை எளிதில் தோற்கடித்தது. மோகன் பகான் அணியில் மன்விர் சிங் 11-வது மற்றும் 54-வது நிமிடத்திலும், ராய் கிருஷ்ணா 83-வது (பெனால்டி வாய்ப்பு), 86-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஒடிசா அணி தரப்பில் கேப்டன் அலெக்சாண்டர் 45-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய மோகன் பகான் அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். ஒடிசா அணிக்கு இது 9-வது தோல்வியாகும். 2 கோல் அடித்த ராய் கிருஷ்ணா இந்த சீசனில் மொத்தம் 11 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் -ஈஸ்ட் பெங்கால் (மாலை 5 மணி), ஐதராபாத் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story