கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி + "||" + ISL Football: East Bengal win

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது.
கோவா, 

11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. பெங்கால் அணியில் ஸ்டீன்மான் (6-வது நிமிடம்), அந்தோணி பில்கிங்டன் (68-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஐதராபாத்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 87-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.