கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சுயகோலால் சென்னை அணி தோல்வி + "||" + ISL Football: Chennai team defeated by suicide

ஐ.எஸ்.எல். கால்பந்து: சுயகோலால் சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சுயகோலால் சென்னை அணி தோல்வி
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
கோவா, 

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 89-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. பந்து அதிகமான நேரம் சென்னை அணியினர் (53 சதவீதம்) பக்கம் சுற்றினாலும், இலக்கை நோக்கி 4 ஷாட்டுகள் அடித்த போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. ஆட்டம் கோல் இன்றி டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) சென்னை அணி அதிர்ச்சியை சந்தித்தது. ஐதராபாத் வீரர் டேவிட் கிரான்ட் கோல் நோக்கி இடது காலால் உதைத்த பந்து சென்னை வீரர் என்ஸ் சிபோவிச்சின் காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக மாறியது. முடிவில் ஐதராபாத் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. அதே சமயம் 17-வது லீக்கில் விளையாடி 3 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கும் சென்னை அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஒடிசா-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது
சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.
2. இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி 700 பேர் பங்கேற்பு.
3. இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி 700 பேர் பங்கேற்பு.
4. நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நடந்த நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வக்கீல்கள் அணி கோப்பை வென்றது
நீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே நடந்த ‘நல்லுறவு கிரிக்கெட்' போட்டியில் வக்கீல்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
5. ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்.