ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 13 Feb 2021 10:50 PM GMT (Updated: 13 Feb 2021 10:50 PM GMT)

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 92-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 92-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் வாங்கிய கோலால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் சென்னை அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 

Next Story