கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி + "||" + ISL Football: Goa team wins

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி வெற்றி பெற்றது.
கோவா, 

கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 97-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றதோடு அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. கோவா அணியில் நோகுரா, ஆர்டிஸ் மென்டோஜா, இவான் கோன்சலேஸ் கோல் அடித்தனர். இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே இறுதிப்போட்டி கோவா படோர்டாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மார்ச் 13-ந்தேதி நடைபெறும் என்று ஐ.எஸ்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.