ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
x
தினத்தந்தி 21 Feb 2021 12:18 AM GMT (Updated: 21 Feb 2021 12:18 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையை ஜாம்ஷெட்பூர் வீழ்த்தியது.

கோவா,

கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்றிரவு நடந்த 100-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணியில் போரிஸ் சிங் (72-வது நிமிடம்), டேவிட் கிரான்ட் (90-வது நிமிடம்) கோல் அடித்தனர். இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்களூரு-கோவா (மாலை 5 மணி), சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story