கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + ISL Football: Guwahati team qualifies for the semi-finals

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
கோவா, 

கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன்சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று கடைசி கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் நேற்றிரவு நடந்த 107-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்தது. 

சுஹைர் (34-வது நிமிடம்), லாலெங்மாவியா (45-வது நிமிடம்) கவுகாத்தி அணியில் கோல் அடித்தனர். தனது கடைசி லீக்கில் விளையாடிய கவுகாத்தி அணி 8 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 33 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 3-வது அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே ஏ.டி.கே. மோகன் பகான், மும்பை சிட்டி அணிகளும் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன. 

அரைஇறுதி வாய்ப்புக்கான மற்றொரு இடத்துக்கு எப்.சி.கோவா, ஐதராபாத் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.