கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை + "||" + ISL Football: Odisha - Bengal goal score in the match

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 108-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- ஒடிசா அணிகள் மோதின. முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் முன்னிலை பெற்ற நிலையில் பிற்பாதியில் ஒடிசா வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். பால் ராம்பேங்ஜாவா, ஜெர்ரி தலா 2 கோல் போட்டனர். பெங்கால் வீரர்களும் பதிலடி கொடுக்க தவறவில்லை. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் ஒடிசா அணி 6-5 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்று ஆறுதல் அடைந்தது. ஐ..எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டம் இது தான்.

இன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எப்.சி. கோவா- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதிக்கு தகுதி பெற ஐதராபாத் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக டிரா செய்தாலே கோவா அரைஇறுதிசுற்றை எட்டி விடும். இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி-ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.