கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Goa-Mumbai clash in the first semi-final today

ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி., பெங்களூரு உள்பட 7 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை சிட்டி (12 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), 4-வது இடம் பெற்ற கோவா (7 வெற்றி, 10 டிரா, 3 தோல்வி) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் வருகிற 8-ந் தேதி மீண்டும் ஒருமுறை அரைஇறுதியில் மோதும். இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து அதிக வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சமநிலை ஏற்பட்டால் கோல் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

ஐ.எஸ்.எல். வரலாற்றில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 7-ல் கோவாவும், 5-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அரைஇறுதியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணிக்கு 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 2-வது வெற்றியை பெற்றது.
2. இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் போட்டி 'டிரா'
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை உயர்வு
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி கோவாவில் தொடங்குகிறது. மார்ச் மாதம் வரை நடக்கும் இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்கின்றன.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.