கால்பந்து

ஐ.எஸ்.எல். அரைஇறுதி: மும்பை-கோவா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Semi-final: Mumbai-Goa draw

ஐ.எஸ்.எல். அரைஇறுதி: மும்பை-கோவா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். அரைஇறுதி: மும்பை-கோவா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். அரைஇறுதி கால்பந்து போட்டியில் மும்பை-கோவா ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய மும்பை சிட்டி- எப்.சி.கோவா அணிகள் இடையிலான பரபரப்பான அரைஇறுதியின் முதலாவது சுற்று 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகள் அரைஇறுதியின் 2-வது சுற்றில் வருகிற 8-ந்தேதி மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- ஏ.டி.கே. மோகன் பகான் இடையிலான மற்றொரு அரைஇறுதி சுற்று இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது.