‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
x
தினத்தந்தி 6 March 2021 1:27 AM GMT (Updated: 6 March 2021 1:27 AM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி வெற்றி பெற்றது.

சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-18, 28-26, 25-17 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் சுங்க இலாகா-ஐ.சி.எப். (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-செயின்ட் ஜோசப்ஸ், இந்தியன் வங்கி-எஸ்.ஆர்.எம். அணிகள் மோதுகின்றன.

Next Story