கால்பந்து

சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா-ஓமன் ஆட்டம் ‘டிரா’ + "||" + International Football Match: India-Oman match 'Draw'

சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா-ஓமன் ஆட்டம் ‘டிரா’

சர்வதேச கால்பந்து போட்டி: இந்தியா-ஓமன் ஆட்டம் ‘டிரா’
சர்வதேச கால்பந்து போட்டியில் இந்தியா-ஓமன் ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
துபாய்,

இந்தியா- ஓமன் அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி துபாயில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 42-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்லென்சனா சுயகோல் அடித்தார். அதாவது எதிரணி வீரர் அடித்த பந்தை கோல் கீப்பரோடு சேர்ந்து தடுக்க முயற்சித்த போது அது அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்தது. இதனால் முதல் பாதியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியது.

55-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர்சிங் தலையால் முட்டி கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின்னர் 63-வது நிமிடத்தில் ஓமன் வீரர் அல்சாதி அடித்த நல்ல ஷாட்டை இந்திய கோல் கீப்பர் அம்ரிந்தர்சிங் அபாரமாக தடுத்து நிறுத்தினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய கால்பந்து அணி 15 மாதங்களுக்கு பிறகு பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும். இந்திய அணி அடுத்து இதே மைதானத்தில் வருகிற 29-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.