கால்பந்து

கால்பந்தில் அசத்தும் குட்டி பிரபலம் + "||" + Awesome little celebrity in football

கால்பந்தில் அசத்தும் குட்டி பிரபலம்

கால்பந்தில் அசத்தும் குட்டி பிரபலம்
ஈரானைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அராத் ஹொசைனி. அசாத்திய கால்பந்து திறமையால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர் களால் கொண்டாடப்படுகிறான்.
சர்வதேச அளவில் கால்பந்து அரங்கில் ஜாம்பவான்களாக திகழும் மெஸ்சி, ரொனால்டோவை மிஞ்சும் அளவுக்கு, கால்பந்தில் பல மாயாஜாலம் நிகழ்த்துகிறான். சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் அராத் ஹொசைனியின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் புதுமையான பயிற்சி, பந்தை கடத்தி செல்லும் அபாரம், இலக்கை குறிவைக்கும் துல்லியம்... என சிறுவனின் கால்பந்தாட்ட திறனை வியந்து ரசித்த மக்கள், அவனை கொண்டாடி வருகிறார்கள்.

சிறுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தேடிக்கண்டுபிடித்த ரசிகர்கள், அவனை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். 29 லட்சம் பேர், 7 வயது சிறுவனின் இன்ஸ்டா கணக்கை பின் தொடர்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே...? ஏழு வயது சிறுவனான அராத் ஹொசைன் தற்போதே சர்வதேச கால்பந்து ரசிகர்களுக்கு இணையாக தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிவிட்டான்.