சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்


சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்
x
தினத்தந்தி 2 May 2021 7:57 PM GMT (Updated: 2 May 2021 7:57 PM GMT)

சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்.

மிலன்,

இத்தாலியில் பிரபலமான சீரி ஏ கால்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த அடலாண்டா- சாசுஓலோ இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததன் மூலம் இன்டர்மிலன் அணி (34 ஆட்டத்தில் 25 வெற்றி, 7 டிரா, 2 தோல்வியுடன் 82 புள்ளி) முதலிடத்தை பிடித்து கோப்பையை வெல்வது உறுதியாகி இருக்கிறது. இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இன்டர்மிலன் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோப்பையை வசப்படுத்துகிறது. இதன் மூலம் யுவென்டஸ் அணியின் 9 ஆண்டுகால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

Next Story