ஐரோப்பா லீக் கால்பந்து போட்டி : வில்லாரியல் அணி சாம்பியன்


ஐரோப்பா லீக்  கால்பந்து போட்டி :  வில்லாரியல் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 27 May 2021 11:59 AM GMT (Updated: 2021-05-27T17:29:07+05:30)

ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் வில்லாரியல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


ஐரோப்பா சாம்பியன் லீக் பைனல் கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட்- ஸ்பெனியின் வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் வில்லாரியலின் ஜெரார்டு மொரேனோ முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் வில்லாரியல் 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் எடின்சன் கவானி பதில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.

அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நீண்ட நேரம் சென்ற பிறகு வில்லாரியல் 11-10 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

மான்செஸ்டர் யுனைடெட் அணி 2017-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

Next Story