கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தள்ளிவைப்பு + "||" + Copa America 2021: Tournament left without a host country after CONMEBOL rules out Argentina amid rising COVID-19 cases

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தள்ளிவைப்பு

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொலம்பியா மற்றும் அர்ஜென்டினாவில் வருகிற 11-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

தென்அமெரிக்க கண்டத்துக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு மோத தயாராகி வந்தன. கொலம்பியா அதிபருக்கு எதிராக அந்த நாட்டில் போராட்டங்கள் நடந்து வருவதால் கொலம்பியாவில் போட்டியை நடத்தும் முடிவு சமீபத்தில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அர்ஜென்டினாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊடரங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு இந்த போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தள்ளிவைக்கப்படுவதாக தென் அமெரிக்க கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இந்த போட்டியை நடத்த சில நாடுகள் ஆர்வம் தெரிவித்து இருப்பதாகவும், அது குறித்து ஆலோசித்து போட்டியை நடத்தும் புதிய நாடு எது? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.