கால்பந்து

உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி + "||" + India 0-1 Qatar: 2022 FIFA World Cup Qualifiers

உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி

உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது.
புதுடெல்லி

2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்தியா விளையாடி வருகிறது.

தொடரின் இ-பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி மீதமுள்ள கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுடன் மோதி வருகிறது. ஏற்கனவே உலக கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியின் 33-வது நிமிடத்தில் கத்தார் வீரர் அப்துலாசிஸ் ஹதெம் கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப ஆட்டத்தின் கடைசி வரை இந்திய அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணடைந்தன. இறுதியில் கத்தார் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து
இந்தியாவில் இருந்து பயணிகள் விமானம் வர விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து நீக்கியுள்ளது.
2. 40 வருடங்களில் இல்லாத அளவு கடும் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.3 % ஆக சரிவு
ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதத்தில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.86- லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி
இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பி உள்ளது.