கால்பந்து

குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து + "||" + England defeated Croatia

குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் நேற்று லண்டனில் நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து- குரோஷியா (டி பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பந்தை கடத்துவதிலும், ஷாட் அடிப்பதிலும் இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதினர். 6-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பில் போடென் உதைத்த பந்து கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவிப்போனது. முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.

பிற்பாதியில் 57-வது நிமிடத்தில் சக வீரர் கல்வின் பிலிப்ஸ் கோல் நோக்கி தட்டிக்கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங், குரோஷியா கோல் கீப்பர் லிகாகோவிச்சை ஏமாற்றி சூப்பராக கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இங்கிலாந்து அணி தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை ருசிப்பது (இதற்கு முன்பு 4-ல் தோல்வி, 5-ல் டிரா) இதுவே முதல் முறையாகும்.

இதே போல் ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தியது.