கால்பந்து

டிராவில் முடிந்த ஸ்பெயின், சுவீடன் அணிகள் இடையிலான லீக் போட்டி + "||" + EURO 2020 Highlights: Spain held to goalless draw by rugged Sweden

டிராவில் முடிந்த ஸ்பெயின், சுவீடன் அணிகள் இடையிலான லீக் போட்டி

டிராவில் முடிந்த ஸ்பெயின், சுவீடன் அணிகள் இடையிலான லீக் போட்டி
உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய ஸ்பெயின் வீரர்கள், சுவீடன் வீரர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்தனர்.
ஆம்ஸ்டர்டாம்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ போட்டி ) 11 நாடுகளை சேர்ந்த 11 நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி, 24-வது இடத்தில் உள்ள உக்ரைனை எதிர்கொண்டது. முடிவில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை போராடி வீழ்த்தியது.

கிளாஸ்கோவில் நேற்று நடந்த டி பிரிவு ஆட்டத்தில் செக்குடியரசு-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செக்குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. செக்குடியரசு அணியின் முன்கள வீரர் பேட்ரிக் சீக் 42-வது மற்றும் 52-வது நிமிடங்களில் அடித்தடுத்து கோல் அடித்தார். இதில் 52-வது நிமிடத்தில் மைதானத்தின் நடுவில் இருந்து அவர் அடித்த பந்து கோல்கீப்பரை தாண்டி கோல் வலைக்குள் புகுந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

 ஈ பிரிவில் நடந்த ஸ்பெயின், சுவீடன் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய ஸ்பெயின் வீரர்கள், சுவீடன் வீரர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்தனர். இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் போட முயன்றும் இறுதி வரை பலனளிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர மைதானத்தில் நடந்த ஈ பிரிவு லீக் ஆட்டத்தில் சுலோவாக்கியா அணி 2-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் போலந்து அணியை வென்றது. ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக போலந்து வீரருக்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு பறிபோனது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சுலோவாக்கியா வீரர் பதில் கோல் திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பிய கால்பந்து இறுதிப்போட்டி: இத்தாலி அணி “சாம்பியன்”
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பெல்ஜியத்தை வீழ்த்தி இத்தாலி அரையிறுதிக்கு தகுதி
இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
3. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கியது இத்தாலி 3-0 கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்தது
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்து வெற்றியுடன் தொடங்கியது.
4. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இன்று 3 ஆட்டங்கள்
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) நேற்று தொடங்கியது.