கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது + "||" + UEFA Euro 2020 Highlights: France 1-0 Germany

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது

ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது
ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹம்மல்ஸ் கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
புடாபெஸ்ட்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடவில்லை. 42-வது நிமிடத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கம்பத்திற்கு மேலாக அடித்து வீணடித்தார்.

பிற்பாதியில் கடைசி கட்டத்தில் போர்ச்சுகல் அடுத்தடுத்து 3 கோல்களை போட்டு மிரட்டியது. 84-வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ கோல் போட்டார். 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய ரொனால்டோ, கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு பிரமிக்க வைத்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ்  ஹம்மல்ஸ் கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தனது தூதரை அனுப்பிய பிரான்ஸ்: வெளியுறவு மந்திரி வரவேற்பு
மீண்டும் தனது தூதரை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள பிரான்சுக்கு ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
3. கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்க பிரான்ஸ் அரசு முடிவு
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சா்வதேசப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைக்கிறது பிரான்ஸ்
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
5. பிரான்சில் கெய்ர்ன் நிறுவனத்தால் இந்திய சொத்துகள் முடக்கம் ; மத்திய அரசு மறுப்பு
பிரான்சில், இந்திய சொத்துகள் முடக்கிய கெய்ர்ன் நிறுவனம்; இது குறித்து அரசுக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.