தோற்றும் அடுத்த சுற்றை எட்டியது வேல்ஸ் அணி


தோற்றும் அடுத்த சுற்றை எட்டியது வேல்ஸ் அணி
x
தினத்தந்தி 20 Jun 2021 11:27 PM GMT (Updated: 2021-06-21T04:57:15+05:30)

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.

ரோம், 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ரோம் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது. 39-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் பெசினா கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் அம்பட்டு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு அதன் பிறகு 10 வீரர்களுடன் அந்த அணி ஆடினாலும் மேற்கொண்டு கோல் வாங்காமல் சமாளித்துக் கொண்டது.

இதே பிரிவில் நடந்த மற்ெறாரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை பதம் பார்த்தது. இந்த பிரிவில் இத்தாலி (9 புள்ளி) ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. வேல்ஸ், சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் வேல்ஸ் அடுத்த சுற்று அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. சுவிட்சர்லாந்து அடுத்த சுற்று வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. 3 ஆட்டத்திலும் தோற்ற துருக்கி வெளியேறியது.

Next Story