கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி + "||" + Italy vs Wales, Switzerland vs Turkey updates

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி

ஐரோப்பிய  கால்பந்து சாம்பியன்ஷிப் :  இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
ரோம் 


ரோம் மைதானத்தில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி, வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி வீரர்கள் எதிரணியைத் திணறடித்தனர். 39-வது நிமிடத்தில் மேட்டியோ பெசினா  கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பதில் கோல் அடிக்க வேல்ஸ் அணி வீரர்கள் கடைசி வரை போராடியும், அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்று போனது. இறுதியில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.

அஜர்பைஜானின் பாகு மைதானத்தில் நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் துருக்கி அணியை 3-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்து அணி வென்றது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலே சுவிஸ் வீரர் ஹாரிஸ் செப்ரோவிக் கோல் அடித்தார்.

26 மற்றும் 68-வது நிமிடங்களில் சுவிஸ் வீரர் ஷெர்டன் சர்கியூரி  2 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசி வரை போராடிய துருக்கி அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. இதன் மூலம் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.