ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதிய ஆட்டம் டிரா


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதிய ஆட்டம் டிரா
x

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ்-ஹங்கேரி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவானது.

புடாபெஸ்ட், 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ‘எப்’ பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த உலக சாம்பியன் பிரான்ஸ்-ஹங்கேரி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியின் பின்பாதியில் மாற்று வீரராக களம் இறங்கிய பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் ஓஸ்மானே டெம்பில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் வெளியேறினார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து காயத்தின் தன்மை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் ஐரோப்பிய கால்பந்து போட்டியின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Next Story