சுலோவக்கியாவை பந்தாடியது ஸ்பெயின்


சுலோவக்கியாவை பந்தாடியது ஸ்பெயின்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:15 AM GMT (Updated: 2021-06-24T06:45:35+05:30)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை ஊதித்தள்ளியது.

செவில்லி,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் செவில்லி நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை ஊதித்தள்ளியது. இதில் இரண்டு சுயகோல்களும் அடங்கும். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 3-2 என்ற கோல் கணக்கில் போலந்தை தோற்கடித்தது.

‘இ’ பிரிவில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த சுவீடன் (2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளி) ஸ்பெயின் (ஒரு வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளி) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

Next Story