கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு தகுதி + "||" + Copa America Football: Uruguay and Paraguay qualify for the quarterfinals

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு தகுதி

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.
பிரேசிலியா,

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிைய எட்டும்.

இந்த நிலையில் குய்பாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, பொலிவியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணிைய தொடுத்தன. உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் இலக்கை நோக்கி அடித்த அருமையான ஷாட்டை பொலிவியா கோல் கீப்பர் கார்லோஸ் லாம்பி அபாரமாக தடுத்து நிறுத்தினார்.

40-வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு முதல் கோல் வந்தது. அந்த அணி வீரர் சுவாரஸ் கோலை நோக்கி திருப்பிய பந்தை பொலிவியா அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ஜெய்ரோ குயின்டிரோஸ் தடுத்து வெளியேற்ற முயற்சித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுய கோலானது.

தொடர்ந்து 79-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடிசன் கவானி கோல் போட்டு அசத்தினார். பொலிவியா அணி கடைசி வரை போராடியும் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. முடிவில் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை சாய்த்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய உருகுவே அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இதே பிரிவில் பிரேசிலியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பராகுவே-சிலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் சிலி அணியின் கட்டுப்பாட்டில் (69 சதவீதம்) தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது. அவர்கள் ெவகுவாக ஆதிக்கம் செலுத்தினாலும் எதிரணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

அதே சமயம் பராகுவே மிரட்டியது. 33-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட பந்தை பராகுவே வீரர் பிரையன் சாமுடியோ தலையால் முட்டி கோலாக்கினார். 58-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் பராகுவேயின் மிகுல் அல்மிரோன் கோலடித்தார். முடிவில் பராகுவே அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது.

‘ஏ’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்களில் உருகுவே-பராகுவே, அர்ஜென்டினா-பொலிவியா அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இதுவரை நடந்த ஆட்டங்கள் முடிவில் அர்ஜென்டினா (2 வெற்றி, ஒரு டிரா), பராகுவே (2 வெற்றி, ஒரு தோல்வி), சிலி (ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி), உருகுவே (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) அணிகள் கால்இறுதியை உறுதி செய்து விட்டன. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பொலிவியா கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் இன்று மோதுகின்றன.
3. கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
4. கோபா அமெரிக்கா கால்பந்து; அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஈகுவேடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
5. கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்சி அசத்தலால் அர்ஜென்டினா அபார வெற்றி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.