நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்து செக்குடியரசு அணி கால்இறுதிக்கு தகுதி


நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்து செக்குடியரசு அணி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Jun 2021 12:19 AM GMT (Updated: 2021-06-28T05:49:31+05:30)

செக்குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

புடாபெஸ்ட்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 68-வது நிமிடத்தில் தாமஸ் ஹோல்ஸ் தலையால் முட்டியும், 80-வது நிமிடத்தில் சக வீரர் ஹோல்ஸ் தட்டிக்கொடுத்த பந்தை பாட்ரிக் ஸ்சிக்கும் கோலாக்கினர். முன்னதாக 55-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் நெதர்லாந்து வீரர் மாத்திஸ் டி லிட் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடியதால் நெதர்லாந்தின் பின்கள தடுப்பு பலவீனமடைந்தது. அதை செக்குடியரசு வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். செக்குடியரசு அணி கால்இறுதியில் டென்மார்க்கை சந்திக்கிறது.

Next Story