ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பெல்ஜியத்தை வீழ்த்தி இத்தாலி அரையிறுதிக்கு தகுதி


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 3 July 2021 3:48 AM GMT (Updated: 2021-07-03T09:18:42+05:30)

இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

முனிச், 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.  இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு முனிச் நகரில் அரங்கேறிய  கால் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம், 4 முறை உலக சாம்பியனான இத்தாலியை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் நடைபெற்றது. 

முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடித்தது. பெல்ஜியம் சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், இத்தாலி அணி  2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


Next Story