செக்குடியரசு அணியை சாய்த்து அரைஇறுதியில் டென்மார்க்


செக்குடியரசு அணியை சாய்த்து அரைஇறுதியில் டென்மார்க்
x
தினத்தந்தி 4 July 2021 1:59 AM GMT (Updated: 2021-07-04T07:29:17+05:30)

செக்குடியரசு அணியை சாய்த்த டென்மார்க் அரைஇறுதிக்குள் நுழைந்தது.

பாகு, 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த 3-வது கால்இறுதியில் டென்மார்க்- செக்குடியரசு அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டென்மார்க் அணி 2 கோல்கள் போட்டது. அந்த அணியின் தாமஸ் டெலானி 5-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்தார். 

42-வது நிமிடத்தில் சக வீரர் மாலே தட்டிக்கொடுத்த பந்தை கேஸ்பர் டோல்பெர்க் கோலாக்கினார். பிற்பாதியில் செக்குடியரசு வீரர் பாட்ரிக் சீக் 49-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நடப்பு தொடரில் அவரது 5-வது கோல் இதுவாகும். மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர முனைப்பு காட்டிய செக்குடியரசின் போராட்டத்துக்கு பலன் கிட்டவில்லை.

முடிவில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வீழ்த்தி 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Next Story