கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து; இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Euro 2020: England Thrash Ukraine 4-0 To Set Up Semi-Final Clash Against Denmark

ஐரோப்பிய கால்பந்து; இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து; இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து போட்டி தொடரில் டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பாகு,

16-வது ஐரோப்பிய கால்பந்து தொடர் (யூரோ) இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. பாகு நகரில் நேற்று நடந்த 3-வது காலிறுதியில் டென்மார்க்- செக் குடியரசு அணிகள் சந்தித்தன. இதில்,   2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி  டென்மார்க் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

 இரண்டாவது பாதியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. உக்ரைன் அணியினரால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா- டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன.
2. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்லப்போவது யார்? இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதிய ஆட்டம் டிரா
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ்-ஹங்கேரி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவானது.
4. ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு மீண்டும் ஏமாற்றம் போலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் ‘டிரா’
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்துக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி ‘டிரா’ கண்டு ஏமாற்றத்திற்குள்ளானது.
5. ஐரோப்பிய கால்பந்து: நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரியாவை சாய்த்து நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.