கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து: உக்ரைனை உருக்குலைத்தது இங்கிலாந்து 25 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி + "||" + European football: England qualify for the semi-finals after 25 years of beating Ukraine

ஐரோப்பிய கால்பந்து: உக்ரைனை உருக்குலைத்தது இங்கிலாந்து 25 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்து: உக்ரைனை உருக்குலைத்தது இங்கிலாந்து 25 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் சீர்குலைத்த இங்கிலாந்து அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
ேராம்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியில் நேற்று முன்தினம் இரவு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அரங்கேறிய கடைசி கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, உக்ரைனை சந்தித்தது. இதில் எதிர்பார்த்தது போலவே பலம் வாய்ந்த இங்கிலாந்தின் ஆதிக்கமே மேேலாங்கியது. 4-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கோல் கணக்கை கேப்டன் ஹாரி கேன் தொடங்கி வைத்தார். சக வீரர் ஸ்ெடர்லிங் தட்டிக்கொடுத்த பந்தை அவர் ேநா்த்தியாக வலைக்குள் தள்ளினார். அதன் பிறகு மேலும் சில ஷாட்டுகளை உக்ரைன் கோல் கீப்பர் ஜியார்கி புஷ்சன் தடுத்து விட்டார்.பிற்பாதியில் இங்கிலாந்து வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக துடிப்புடன் செயல்பட்டனர். 46-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் லுக் ஷா கோல் பகுதியை நோக்கி தூக்கியடித்த பந்தை அங்கு நின்ற இங்கிலாந்தின் ஹாரி மேக்குவையர் துள்ளிகுதித்து தலையால் முட்டி கோலாக்கினார்.


இங்கிலாந்து வெற்றி

தொடர்ந்து 50-வது நிமிடத்தில் ஹாரி கேனும், 63-வது நிமிடத்தில் ஜோர்டான் ஹென்டர்சனும் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணிக்காக 62-வது ஆட்டத்தில் ஆடிய ெஹன்டர்சனுக்கு இது தான் முதலாவது சர்வதேச கோலாகும். இங்கிலாந்தின் கோல் மழையால் உருக்குலைந்த உக்ரைனால் இறுதி வரை நிமிரவே முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை பந்தாடி அரைஇறுதிக்கு முன்னேறியது. யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி இதுவாகும். அத்துடன் இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் பிரமாதப்படுத்தியுள்ளது. பெரிய தொடர்களில் (உலக கோப்பை மற்றும் யூேரா) இங்கிலாந்து அணி ெதாடர்ச்சியாக 5 ஆட்டங்களில் கோல் விட்டுக்கொடுக்காதது இதுவே முதல் முறையாகும்.

1996-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி அடுத்து டென்மார்க் அணியை லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் 7-ந்தேதி சந்திக்கிறது. அதற்கு முன்பாக 6-ந்தேதி நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

ஹாரி கேன் பேட்டி

யூரோ கால்பந்தில் ‘நாக்-அவுட்’ சுற்றில் இரட்ைட கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ள கேப்டன் 27 வயதான ஹாரி கேன் கூறுகையில், ‘டென்மார்க்குக்கு எதிரான அரைஇறுதி சுற்று கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனால் திட்டமிட்டு சரியாக விளையாடினால் வெற்றி பெற முடியும். இறுதிப்போட்டிக்குள் நுழைய எங்களுக்கு இது அருமையான வாய்ப்பு. இது போன்ற பெரிய போட்டிகளில் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் ஆடும் சந்தர்ப்பம் அடிக்கடி கிட்டாது. எனவே இந்த வாய்ப்பை நாங்கள் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாட வேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்? 2-வது அரைஇறுதி இன்று நடக்கிறது
ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்? 2-வது அரைஇறுதி இன்று நடக்கிறது.
2. கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது
கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது.
3. ஐரோப்பிய கால்பந்து அரைஇறுதியில் இத்தாலி-ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. யூரோ கோப்பை கால்பந்து: 3-0 என துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி அதிரடி வெற்றி
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி அதிரடி வெற்றிபெற்றது.