கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது + "||" + Copa Amrica: Brazil beat Peru 1-0 to qualify for the final

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது
கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி 1-0 கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது.
ரியோடிஜெனீரோ,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, முன்னாள் சாம்பியனான பெருவை எதிர்கொண்டது. இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்தது. பிரேசில் வீரர்கள் கேஸ்மிரோ, நெய்மார், ரிச்சர்லிசன் ஆகியோர் ஆரம்பத்தில் கோலை நோக்கி அடித்த அதிரடியான ஷாட்களை பெரு அணியின் கோல்கீப்பர் பெட்ரோ கேலஸ் அபாரமாக தடுத்து முறியடித்தார்.


35-வது நிமிடதில் பிரேசில் அணி கோல் அடித்தது. நெய்மார் பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி பக்கவாட்டில் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் லூகாஸ் பக்யூட்டா இடது காலால் உதைத்து கோல் வலைக்குள் அனுப்பினார். பிற்பாதியில் பதில் கோல் திருப்ப போராடிய பெரு அணியின் முயற்சிகளை பிரேசில் கோல்கீப்பர் எடெர்சன் முறியடித்தார். முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வருகிற 10-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரேசில் அணி, அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை சந்திக்க விரும்புகிறோம் என்று பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த பயங்கரவாதி யார்? மீட்பு நடவடிக்கையில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்
யூதர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஸ்வாட் பிரிவு பாதுகாப்புபடையினர் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
2. அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளை..!
அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளையடிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தண்டவாளத்தில் விழுந்த விமானம்: விமானியை நொடிப்பொழுதில் மீட்ட பொதுமக்கள்...!!
அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த விமானத்தில் இருந்து விமானியை நொடிப்பொழுதில் பொதுமக்கள் மீட்ட சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்துள்ளது.