கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் + "||" + ISL football Chennai F.C. To the team Appointment of new coach

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக 51 வயதான பேஸிதார் பாண்டோவிச் (மான்டினெக்ரோ) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, 

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக 51 வயதான பேஸிதார் பாண்டோவிச் (மான்டினெக்ரோ) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய பயிற்சியாளர் சபா லாஸ்லோவுக்கு (ருமேனியா) பதிலாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பேஸிதார் பாண்டோவிச் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘சென்னை அணியினருடன் இணைய ஆர்வமுடன் காத்திருக்கிறேன், சென்னை அணியை மேலும் மேம்படுத்துவதும், வீரர்களை யுக்தி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏற்றம் காண செய்வதும் எனது இலக்கு’ என்று புதிய பயிற்சியாளர் பாண்டோவிச் தெரிவித்துள்ளார்.