கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா + "||" + Argentina beats Brazil 1-0 win Copa America 2021

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ரியோடிஜெனீரோ,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 27-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறையாகும். 

ஆர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது ஆகும். கோபா அமெரிக்காவை அதிக முறை வென்ற அணி என்ற உருகுவேவின் சாதனையை அர்ஜென்டினா சமன் செய்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் இன்று மோதுகின்றன.
2. கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
3. கோபா அமெரிக்கா கால்பந்து; அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஈகுவேடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
4. கோபா அமெரிக்கா கால்பந்து: மெஸ்சி அசத்தலால் அர்ஜென்டினா அபார வெற்றி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
5. கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே, பராகுவே அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.