கால்பந்து

நெய்மருக்கு ஆறுதல் கூறிய மெஸ்சி- இணையத்தில் வைரலாகிறது + "||" + Lionel Messi Keeps Celebrating Teammates At Bay As He Consoles Neymar After Argentina Win Copa America

நெய்மருக்கு ஆறுதல் கூறிய மெஸ்சி- இணையத்தில் வைரலாகிறது

நெய்மருக்கு ஆறுதல் கூறிய மெஸ்சி- இணையத்தில் வைரலாகிறது
பிரேசில் கேப்டன் நெய்மருக்கு வெற்றி பெற்ற அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கோபா அமெரிக்கா போட்டியில் தோல்வியைத் தழுவிய, பிரேசில் கேப்டன் நெய்மருக்கு வெற்றி பெற்ற அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்  லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணியும் மோதின. 

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதே போல், உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது முதல் சர்வதேச கோப்பையை கைப்பற்றியுள்ளார். 

கோப்பையை கைப்பற்றியதும் அர்ஜெண்டினா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, நட்சத்திர வீரரான மெஸ்சி, நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.   வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு அவசர கால அனுமதி
அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு ஓப்புதல் அளித்துள்ளது.