பெனால்டி ஷூட்-அவுட்டில் கோட்டை விட்ட இங்கிலாந்து அணி வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்


பெனால்டி ஷூட்-அவுட்டில் கோட்டை விட்ட இங்கிலாந்து அணி வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்
x
தினத்தந்தி 12 July 2021 11:54 PM GMT (Updated: 12 July 2021 11:54 PM GMT)

பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி வீரர்கள் மார்கஸ் ராஷ்போர்ட், ஜெடோன் சான்சோ, புகாயோ சாகா ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டது அந்த அணி தோல்விக்கு வழிவகுத்தது.

லண்டன், 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இத்தாலிக்கு எதிரான பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி வீரர்கள் மார்கஸ் ராஷ்போர்ட், ஜெடோன் சான்சோ, புகாயோ சாகா ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டது அந்த அணி தோல்விக்கு வழிவகுத்தது. இதையடுத்து இந்த மூன்று கருப்பு இன வீரர்களையும் இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இனவெறியுடன் திட்டி தீர்த்துள்ளனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்து ரசிகர்களின் இந்த இழிவான செயலுக்கு அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து கால்பந்து சங்கம் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்து அணி பாராட்டுக்கு தகுதி படைத்ததாகும். சமூக வலைதளங்களில் வீரர்கள் குறித்து இனவெறியுடன் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த துஷ்பிரயோகத்துக்கு காரணமானவர்கள் தங்களது செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ரசிகர்களின் இனவெறி விமர்சனம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இங்கிலாந்து போலீஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையே இறுதிப்போட்டி அரங்கேறிய ஸ்டேடியத்தை சுற்றி நடந்த கலவரம் தொடர்பாக 49 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதலை தடுக்க முயன்ற 19 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து இருக்கின்றனர்.

Next Story