பிஎஸ்ஜி அணியுடன் பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்சி ஒப்பந்தம் என தகவல்


பிஎஸ்ஜி அணியுடன் பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்சி ஒப்பந்தம் என தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:52 AM GMT (Updated: 2021-08-10T16:22:53+05:30)

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணிக்காக விளையாட பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்சி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

பாரிஸ்,

21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய  நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாக அண்மையில் தெரிவித்தார்.  அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி  13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை. வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி)  அணிக்காக விளையாட மெஸ்சி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக இணைய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  2 ஆண்டுகளுக்கு விளையாட மெஸ்சி ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story