மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி + "||" + football tournament

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஒய்.பி.ஆர்.ஏ. அணி முதலிடம் பிடித்தது.
கரூர்,
ஐவர் கால்பந்து போட்டி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி கரூர் மாவட்டம் தாந்தோணி மலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கரூர், திருச்சி, தஞ்சை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. 
ஒய்.பி.ஆர்.ஏ. அணி வெற்றி
போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் உரத்த நாட்டை சேர்ந்த ஒய்.பி.ஆர்.ஏ. அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில்  முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த மெஜஸ்டிக் அணி 2-வது இடத்தையும், ஒய்.பி.ஆர்.பி. அணி 3-வது இடத்தையும், கரூர் டி.பி.எஸ்.எஸ். அணி 4-வது இடத்தையும் பெற்றன.
இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் குமார் தலைமை தாங்கினார். யுனிவர்சல் விளையாட்டு குழு செயலாளர் சசிகுமார் மற்றும் மகேஷ்குமார், முருகானந்தம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக டெக்ஸ் யுனைடெட் கால்பந்து அகடமி கழக தலைவர் ரமணன் வரவேற்றார். முடிவில் கவின் பாரதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேமரூன் நாட்டில் கால்பந்து மைதானத்துக்குள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!
சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளே செல்வதற்காக முயன்றனர். ஆனால் மைதான காவலாளிகள் கதவை மூட முற்பட்டனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2. அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்காவில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி
பஹ்ரைனில் நடந்த கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.