சர்வதேச கால்பந்து : கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை


சர்வதேச கால்பந்து : கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை
x
தினத்தந்தி 2 Sep 2021 8:25 AM GMT (Updated: 2 Sep 2021 8:25 AM GMT)

சமீபத்தில் யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

பாரீஸ்

கிறிஸ்டியானா ரொனால்டோ சமீபத்தில் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக 2018-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். 2003 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்தார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் யுவென்டஸ்  கால்பந்து கிளப்பில் இணைந்தார்.

சமீபத்தில் யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் நேற்று  உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு கோல்களை அடித்த ரொனால்டோ, உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய், 109 சர்வதேச கோல்களை அடித்ததே சாதனையாக இருந்தது.  தற்போது ரொனால்டோ 111 கோல்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Next Story