கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அறுவை சிகிச்சை


கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 8 Sep 2021 3:22 AM GMT (Updated: 2021-09-08T08:52:39+05:30)

பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் பீலேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சாபாலோ,

கால்பந்து ஜாம்பவானான பீலே உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் 3 முறை இடம் பிடித்தவர் ஆவார். 80 வயதான பீலே, சாபாலோவில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு குடல் பகுதியில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story