கால்பந்து

சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல் + "||" + Chennai's F.C. Pandovich, the team's first coach on the 26th

சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்

சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்
சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்.
சென்னை,

11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 19-ந்தேதி கோவாவில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் போஸிதர் பான்டோவிச் (மான்ட்னெக்ரோ) நேற்று ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


புதிய சீசன் தொடங்குவதற்கு முன்பாக எங்களது வீரர்களுக்கு 8 வார காலம் பயிற்சி முகாம் நடக்கிறது. ஒரு பயிற்சியாளராக நீண்ட கால பயிற்சி முகாமை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த 8 வார காலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் தினமும் ஆலோசனை நடத்துகிறோம். வருகிற 26-ந்தேதி முதல் பயிற்சியை தொடங்குகிறோம். மற்ற ஐ.எஸ்.எல். அணிகளுடன் 6-7 நட்புறவு பயிற்சி ஆட்டங்கள் நடத்துவது குறித்து கிளப் நிர்வாகத்திடம் பேசி இருக்கிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் எந்த அணிகள் பயிற்சி ஆட்டத்துக்கு ஆயத்தமாக உள்ளது? எப்போது அதை நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டி உள்ளது. தேதி முடிவானதும் அது குறித்து தெரிவிக்கிறேன்.

சென்னையின் எப்.சி. இளமையும், அனுபவமும் கலந்த அணியாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சில உள்நாட்டு வீரர்களும் உள்ளனர். நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். இனி கடினமாக உழைக்க வேண்டும். கடந்த சீசனில் சென்னை அணி 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அது பற்றி நான் பேசமாட்டேன். சாதனை புள்ளி விவரங்களை திருப்பி பார்க்கும் போது, சென்னை அணி அதிகமான கோல்கள் அடிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களால் கோல் அடிக்க முடியும் என்று நம்புகிறேன். யார் கோல் போடுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அணி வெற்றி பெற வேண்டும். இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.
2. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன்: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் தகவல்
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
3. 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழக கோவில்களில் 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.
4. தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதில் 362 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை அமைச்சர் தகவல்.